< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தருமபுரி சனக்குமார் நதியில் வெள்ளப்பெருக்கு - ஆபத்தை உணராமல் தரைப்பாலத்தில் பயணிக்கும் பொதுமக்கள்
|7 Sept 2022 6:36 AM IST
தருமபுரி கம்பைநல்லூர் வழியே பாயும் சனக்குமார் நதியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக தருமபுரி கம்பைநல்லூர் வழியே பாயும் சனக்குமார் நதியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் கெலவள்ளி கிராமம் அருகே தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளப்பெருக்கு அதிகமாக இருப்பதால் வாகனங்கள் அந்த வழியே செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர். ஆனால் எச்சரிக்கையையும் மீறி ஒரு சில வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் மூழ்கியுள்ள தரைப்பாலத்தின் மீது பயணிக்கின்றனர்.