< Back
மாநில செய்திகள்
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - ஈரோட்டில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிப்பு
மாநில செய்திகள்

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - ஈரோட்டில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிப்பு

தினத்தந்தி
|
16 Oct 2022 7:13 PM IST

குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு,

மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதையடுத்து, அணைக்கு வரும் அனைத்து நீரும் காவிரி ஆற்றில் அப்படியே திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள இலுப்பைத் தோப்பு பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

அங்குள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்குள்ள மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க மாவட்டம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்