< Back
மாநில செய்திகள்
பாலாற்றில் வெள்ளப்பெருக்கு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மாநில செய்திகள்

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தினத்தந்தி
|
5 Aug 2022 6:17 PM IST

தமிழக-ஆந்திர எல்லையில் தொடர் கனமழை காரணமாக ஆந்திராவில் இருந்து தமிழக பாலாற்றில் புல்லூர் தடுப்பணை வழியாக 380 கன அடி தண்ணீர் வினாடிக்கு வந்து கொண்டிருக்கிறது.

வாணியம்பாடி,

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே பாலாறு குறுக்கே ஆந்திரா அரசு கட்டி உள்ள புல்லூர் தடுப்பணை தாண்டி தமிழக பாலாற்றில் 380 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கடந்த பத்து நாட்களாக கர்நாடகா மற்றும் ஆந்திரப் பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக தமிழ் ஆந்திர எல்லையில் உள்ள குப்பம் வழியாக தமிழகத்தில் புல்லூர் தடுப்பணைக்குள் நுழைந்து, தற்போது அதி வேகமாக 380 கன அடி தண்ணீர் பாலாற்றில் வந்துக் கொண்டிருக்கிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் ஆவாரங்குப்பம், ராமநாயக்கன்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி, வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர் வழியாக காஞ்சிபுரம் கடந்து கடலில் சென்று கலக்கும் என தெரிகிறது. பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அனைத்து கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்