< Back
மாநில செய்திகள்
வெள்ளப்பெருக்கு - குற்றாலம் அருவியில் குளிக்க தடை
மாநில செய்திகள்

வெள்ளப்பெருக்கு - குற்றாலம் அருவியில் குளிக்க தடை

தினத்தந்தி
|
30 May 2024 9:12 PM IST

சுற்றுலாப்பயணிகளுக்கு குளிக்க தடை விதித்து காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தென்காசி,

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலம் அருவிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் குற்றாலம் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் செய்திகள்