< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகளுக்கு 2-வது நாளாக தடை
|4 Oct 2023 8:35 PM IST
திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழையும், அவ்வபோது மிதமான மழையும் பெய்து வருகிறது. இதனால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
இதன் காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து பேரூராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இன்றும் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு குறையாத காரணத்தால், சுற்றுலா பயணிகளுக்கு 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.