< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு
|15 Dec 2022 12:30 AM IST
பலத்த மழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
கம்பம், சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய கனமழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. இதனால் சுருளி அருவியில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று காலையில் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தொடர் மழை காரணமாக அருவியில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.