< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்

குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு: 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தினத்தந்தி
|
28 Dec 2022 12:41 PM IST

குற்றாலம் மெயின் அருவியில் 3-ஆவது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது, பழைய குற்றாலம், ஐந்தருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

தென்காசி,

குற்றாலம் மெயின் அருவியில் 3-ஆவது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது. பழைய குற்றாலம், ஐந்தருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று முன்தினம் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு இருந்ததால் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

நேற்று பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்து இருந்தாலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதனால் மெயின் அருவியில் 3-வது நாளாக இன்று குளிக்க தடை விதிக்கப்பட்டது. சபரிமலையில் நடை அடைக்கப்பட்டதால் அய்யப்ப பக்தர்கள் யாரும் குற்றாலத்திற்கு வரவில்லை. குறைவான சுற்றுலா பயணிகளே காணப்பட்டனர்.

மேலும் செய்திகள்