< Back
மாநில செய்திகள்
வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மாநில செய்திகள்

வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தினத்தந்தி
|
31 Aug 2022 1:08 PM IST

வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி,

தேனி மாவட்டம் மற்றும் வைகை ஆற்றின் பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால் வைகை அணைக்கு நீர் வரத்து அதிகமானது. இதனால் வைகை அணையில் நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்துள்ளது.

இதனால், வைகை அணையில் இருந்து காலை 11 மணியளவில் 4,006 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில், 5 மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வைகை ஆற்றில் யாரும் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பட்டவோ, நீர் நிலைகளில் இறங்க கூடாது என்று வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்