< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!
|29 Aug 2022 2:42 PM IST
தென்பெண்ணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கிருஷ்ணகிரி மாவட்டம் கேஆர்பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி,
தென்பெண்ணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கிருஷ்ணகிரி மாவட்டம் கேஆர்பி அணைக்கு நீர்வரத்து 7 ஆயிரத்து 129 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவான 52 அடியில் 50.30 அடியை எட்டியுள்ளது.
அணையின் பிரதான மதகுகளில் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அணையின் தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.