< Back
மாநில செய்திகள்
திருக்கருகாவூர், தேவராயன்பேட்டை பகுதியில் தொடர் மழை:  பலநூறு ஏக்கர் சம்பா பயிர்கள் அழுகின
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

திருக்கருகாவூர், தேவராயன்பேட்டை பகுதியில் தொடர் மழை: பலநூறு ஏக்கர் சம்பா பயிர்கள் அழுகின

தினத்தந்தி
|
15 Oct 2022 7:40 PM GMT

திருக்கருகாவூர் தேவராயன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை காரணமாக பலநூறு ஏக்கர் சம்பா பயிர்கள் அழுகி உள்ளன. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

திருக்கருகாவூர் தேவராயன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை காரணமாக பலநூறு ஏக்கர் சம்பா பயிர்கள் அழுகி உள்ளன. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

3 போகம் சாகுபடி

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம்.

இதில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி முடிவடைந்து, சம்பா சாகுபடி பணிகள் நடந்து வருகின்றன. முன்னதாக குறுவை சாகுபடிக்காக இந்த ஆண்டு குறித்த நேரத்தில் அதாவது ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறந்து விடப்பட்டது.

தொடர் மழை

தற்போது மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து நீர் வரத்து உள்ளது. ஆறுகளில் தண்ணீர் செல்வதால் விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் டெல்டா பகுதிகளில் மழை அச்சுறுத்தல் இருந்து வருவதால், சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். குறுவை அறுவடையின்போது கிடைத்த நெல் மழையில் நனைந்து பாதிக்கப்பட்டது. அதேபோல சம்பா சாகுபடி பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா, திருக்கருகாவூர், தேவராயன்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது.

அழுகி வீணானது

இதன் காரணமாக சம்பா பருவத்தில் எந்திரம் மூலமும், விதை தெளிப்பு முறையிலும் நடவு செய்திருந்த பலநூறு ஏக்கர் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கின. இதில் வயல்களில் இருந்து சம்பா நாற்றுகள் நீரில் மூழ்கி அழுகி வீணாகி விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், 'ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்து நடவு செய்த சம்பா பயிர்கள் தொடர் மழையால் முற்றிலும் அழுகி விட்டது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக அரசு நிவாரண தொகையை வழங்க வேண்டும்' என்றனர்.

மேலும் செய்திகள்