< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வெள்ளத்தில் சேதமடைந்த சான்றிதழ்கள்; 15 நாட்களில் வழங்க நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
|26 Dec 2023 10:37 PM IST
சேதமடைந்த புத்தகங்கள் மற்றும் சீருடைகளையும் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
சென்னை,
சென்னை எழும்பூரில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு குளிர்கால சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-
"வெள்ளத்தில் சேதமடைந்த சான்றிதழ்களை மீண்டும் பெறுவதற்காக மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடுகளை செய்துள்ளோம். சான்றிதழ்களை 15 நாட்களில் வழங்கிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சேதமடைந்த புத்தகங்கள் மற்றும் சீருடைகளையும் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது."
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.