< Back
மாநில செய்திகள்
கொல்லிமலையில் வெள்ளப்பெருக்கு
நாமக்கல்
மாநில செய்திகள்

கொல்லிமலையில் வெள்ளப்பெருக்கு

தினத்தந்தி
|
13 Nov 2022 12:15 AM IST

கொல்லிமலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்துள்ளனர்.

சேந்தமங்கலம்

நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. அந்த மலைப்பகுதியில் வரலாற்று புகழ்வாய்ந்த அரப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அதன் எதிரே வனப்பகுதியில் சுமார் 300 அடி உயரத்திலிருந்து வெள்ளியை உருக்கி விட்டது போல ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் வெள்ள நீர் பாய்ந்து செல்கிறது. இந்தநிலையில் சமீபத்தில் கொல்லிமலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி நீர்வழி பாதைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அந்த நீர்வீழ்ச்சியை நெருங்க முடியாத அளவிற்கு தற்போது வெள்ள நீர் பாய்ந்து செல்கிறது. இதனால் வனத்துறையினர் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்