சிவகங்கை
பாலாற்றில் வெள்ளப்பெருக்கு
|பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி வழியாக திண்டுக்கல் நத்தம் கரந்தமலை பகுதியில் இருந்து உற்பத்தியாகும் பாலாறு மற்றும் உப்பாறு திருப்பத்தூர் வழியாக ராமநாதபுரம் வரை செல்கிறது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் மழை பெய்தால் பாலாற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும். சிங்கம்புணரி வழியாக செல்லும் பாலாற்றில் தடுப்பணைகள் மூலம் சிங்கம்புணரி பகுதி கிராமங்களில் உள்ள பெரிய கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பாலாற்றில் தண்ணீர் வரத்து இல்லாமல் கருவேல மரங்கள் மண்டி காணப்பட்டது. சிங்கம்புணரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக மழை பெய்து வருகிறது. இதனால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.கண்மாய்களுக்கு தண்ணீர் செல்வதால் இந்த ஆண்டு விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாய பணிகளை தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பாலாற்றில் சூழ்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.