< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
பாலமேடு மஞ்சள் மலை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு
|27 July 2022 12:56 AM IST
பாலமேடு மஞ்சள் மலை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அலங்காநல்லூர்,
தென் மேற்கு பருவ மழை கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. நேற்று மாலையில் அலங்காநல்லூர், அழகர் கோவில், காஞ்சரம் பேட்டை, மற்றும் பாலமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. இந்தநிலையில் பாலமேடு அருகே 5 கி.மீ. தொலைவில் உள்ள மஞ்சமலையில் இருந்து திடீரென காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலமேடு வழியாக வெள்ளநீர் ஓடியது. இந்த மழை வெள்ளப்பெருக்கு பல வருடங்களுக்கு பிறகு ஏற்பட்டு உள்ளது என்று பாலமேடு விவசாயிகள் தெரிவித்தனர்.