< Back
மாநில செய்திகள்
திருமணம் செய்வதாக கூறி காதலியுடன் உல்லாசம் - வாலிபர் கைது
மாநில செய்திகள்

திருமணம் செய்வதாக கூறி காதலியுடன் உல்லாசம் - வாலிபர் கைது

தினத்தந்தி
|
28 May 2024 5:50 AM IST

தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பெண் வலியுறுத்திய நிலையில், வாலிபர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சேலம்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வளையமாதேவி எம்.பி.சி.நகர் பகுதியை சேர்ந்த பச்சமுத்து மகன் பாரத் (வயது 25), இவரும் தலைவாசல் பகுதியை சேர்ந்த 20 வயது பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.

இதற்கிடையே திருமணம் செய்வதாக கூறி அந்த பெண்ணை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். அதன்பிறகு அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தி உள்ளார். அதற்கு பாரத் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் மனம் உடைந்த அந்த பெண், ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி பாரத் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்