< Back
மாநில செய்திகள்
சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானம் தாமதம்; பயணிகள் அவதி
திருச்சி
மாநில செய்திகள்

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானம் தாமதம்; பயணிகள் அவதி

தினத்தந்தி
|
9 Jun 2022 2:28 AM IST

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானம் தாமதத்தால் பயணிகள் அவதியடைந்தனர்.

செம்பட்டு:

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று மாலை 6.40 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த விமானம் தொழில்நுட்ப காரணங்களால் சுமார் 3½ மணி நேரம் தாமதமாக இரவு 10 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. இதனால் விமானத்தில் பயணம் செய்த பயணிகளும், அவர்களை அழைத்துச் செல்வதற்காக வந்திருந்த குடும்பத்தினரும் அவதிப்படும் நிலை ஏற்பட்டது.

மேலும் செய்திகள்