< Back
தேசிய செய்திகள்
நான் பேசியதை திரித்து கூறுவது வருத்தமளிக்கிறது - மத்திய மந்திரி நிதின் கட்கரி விளக்கம்
தேசிய செய்திகள்

"நான் பேசியதை திரித்து கூறுவது வருத்தமளிக்கிறது" - மத்திய மந்திரி நிதின் கட்கரி விளக்கம்

தினத்தந்தி
|
30 Sept 2022 3:11 PM IST

நாடு வளர்ச்சிப் பாதையை சீக்கிரம் அடைவது குறித்து தான் பேசிய கருத்துக்களை சிலர் திரித்து கூறுவதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மும்பை,

மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி நாக்பூரில் பாரத் விகாஸ் பரிஷத் சார்பில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதை சுட்டிக்காட்டி, ஏழை மக்கள் அதிகமாக வாழும் பணக்கார நாடு இந்தியா என்று தெரிவித்தார்.

அதோடு நாட்டில் ஏழை மக்கள் பட்டினி, வேலையின்மை, வறுமை, பணவீக்கம், சாதிபாகுபாடு, தீண்டாமை போன்றவற்றை சந்தித்து வருவதாக குறிப்பிட்ட அவர், நாட்டில் 124 மாவட்டங்களில் அடிப்படை கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் இல்லாததால், மக்கள் அதிக அளவில் நகரங்களுக்கு இடம் பெயர்ந்து வருவதாகவும் அவர் பேசினார்.

மத்திய மந்திரி ஒருவரே நாட்டின் தற்போதைய நிலையை இவ்வாறு சுட்டிக்காட்டி பேசியிருப்பதாக, பல்வேறு தரப்பினர் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் நிதின் கட்கரி தனது பேச்சு குறித்து டுவிட்டரில் விளக்கமளித்துள்ளார்.

அதில், "நாடு வளர்ச்சிப் பாதையை சீக்கிரம் அடைவது குறித்து தான் பேசிய கருத்துக்களை சிலர் திரித்து, சர்ச்சையாக்கி அதில் ஆனந்தமடைந்து வருவது மிகவும் வருத்தமளிக்கிறது" என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்