< Back
மாநில செய்திகள்
குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப்பயணிகளுக்கு தடை
மாநில செய்திகள்

குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப்பயணிகளுக்கு தடை

தினத்தந்தி
|
24 July 2023 5:08 PM IST

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் சாரல் மழை தொடர்ந்து பெய்துவருகிறது.

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் காலம் என்பதால் குற்றால அருவிகளில் குளித்து மகிழ பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். நடப்பாண்டில் குற்றால சீசன் சற்று தாமதமாக தொடங்கிய போதிலும் அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது. இதில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர்.

இதனிடையே, குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விட்டு விட்டு சாரல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேலும் செய்திகள்