நாகூர் தர்காவின் 466-வது கந்தூரி விழாவுக்கான கொடி ஊர்வலம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு...!
|உலகபுகழ் பெற்ற நாகூர் தர்காவின் 466-வது கந்தூரி விழாவுக்கான கொடி ஊர்வலம் கோலாகலமாக தொடங்கியது.
நாகப்பட்டினம்,
நாகூர் தர்கா கந்தூரி விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கந்தூரி விழா நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு நாள்தோறும் வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான 466-வது கந்தூரி விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கிறது. முன்னதாக நாகையில் இருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக நாகூருக்கு சென்றடைந்தது.
நாகூரில் முக்கிய விதிகளுக்கு ஊர்வலம் சென்று மீண்டும் அலங்கார வாசலில் ஊர்வலம் நிறைவு பெறுகிறது. சந்தனக்கூடு ஊர்வலம் அலங்கரிக்கப்பட்ட கப்பலில் இருந்து கொடிகள் இறக்கப்பட்டு 5 மினராக்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, தர்கா பரம்பரை கலிபா துவா ஓதிய பிறகு 5 மினராக்களில் ஒரே நேரத்தில் கொடி ஏற்றப்படும்.
பேண்டு வாத்தியங்கள் இசைக்க கப்பல் வடிவ ரதத்தில் கொண்டு செல்லப்படும் கந்தூரி கொடி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று உள்ளனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சந்தன கூடு ஊர்வலம் வருகிற 2-ந்தேதி நடைபெறுகிறது. நாகூர் தர்காவில் 5 மினராக்கள், அலங்கார வாசல், ஆண்டவர் கோபுரம், மண்டபம், உப்பு கிணறு, பக்தர்கள் அமரும் கூடம் உள்ளிட்ட இடங்கள் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.