< Back
மாநில செய்திகள்
ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்க கொடியேற்று விழா
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்க கொடியேற்று விழா

தினத்தந்தி
|
13 Sept 2022 11:09 PM IST

கீழையூரில் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்க கொடியேற்று விழா நடந்தது.

வேளாங்கண்ணி:

கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் 36-வது அமைப்பு தினத்தையொட்டி கொடியேற்றும் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட துணை தலைவர் வெற்றிச்செல்வன் தலைமை தாங்கினார்.மாநில செயலாளர் ஜம்ருத்நிஷா முன்னிலை வகித்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ்குமார் கலந்துகொண்டு சங்க கொடியேற்றி வைத்தார்.இதில் மாவட்ட துணை தலைவர்கள் பிச்சுமணி, சிவலிங்கம் மற்றும் மாவட்ட, வட்டார சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்