< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
முஹையதீன் ஆண்டவர் மலையில் கொடியேற்று விழா
|16 Oct 2023 11:24 PM IST
முஹையதீன் ஆண்டவர் மலையில் கொடியேற்று விழா நடைபெற்றது.
அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டி முஹையதீன் ஆண்டவர் மலையில் ரபியுல் ஆகீர் பிறை ஒன்றுக்கு கொடியேற்றுவது வழக்கம் அதே போல் இன்று கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவில் ஜாமியா பள்ளிவாசல் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு தக்பீர் முழக்கத்துடன் கொடி ஏற்றினர். பின்பு துவா செய்து இனிப்புகள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் முக்கண்ணாமலைப்பட்டி, அன்னவாசல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான முஸ்லிம்கள் மற்றும் அனைத்து சமுதாய பொதுமக்கள் கலந்து கொண்டனர். இன்று முதல் தினமும் 10 நாட்களுக்கு முக்கண்ணாமலைப்பட்டி பெரிய பள்ளிவாசலில் மவூலுது ஓதப்பட்டு நிறைவு நாளில் கந்தூரியுடன் விழா நிறைவு பெறும்.