ராமநாதபுரம்
கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தேசிய கொடி ஏற்றினார்
|ராமநாதபுரத்தில் நடைபெற்ற சுதந்திரதினவிழாவில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். விழாவில் 57 பயனாளிகளுக்கு ரூ.64¾லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற சுதந்திரதினவிழாவில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். விழாவில் 57 பயனாளிகளுக்கு ரூ.64¾லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
அணிவகுப்பு
ராமநாதபுரம் ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 75-வது ஆண்டு சுதந்திர தினவிழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
முன்னதாக ஆயுதப்படை மைதானத்திற்கு வந்த கலெக்டர் ஜானி டாம் வர்கீசை மாவட்ட வருவாய் அதிகாரி காமாட்சி கணேசன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர். விழாவில், மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 45 போலீஸ்துறை அலுவலர்கள், பல்வேறு அரசு துறைகளை சார்ந்த 158 அலுவலர்கள் என மொத்தம் 203 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
நலத்திட்ட உதவி
மேலும் பல்வேறு அரசு நலத்திட்டங்களின் கீழ் மொத்தம் 57 பயனாளிகளுக்கு ரூ.64 லட்சத்து 81 ஆயிரத்து 451 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. மயில்வாகனன், மாவட்ட வன உயிரின காப்பாளர் ஜெகதீஷ் சுதாகர் பாகன், ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. சேக் மன்சூர், வட்டார போக்குவரத்து அலுவலர் சேக்முகம்மது, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் வேலுச்சாமி உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள்,மாணவ,மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கோர்ட்டு
ராமநாதபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்ற சுதந்திரதினவிழாவில் மாவட்ட நீதிபதி விஜயா தேசியக்கொடி ஏற்றி வைத்தார். இதில், கூடுதல் மாவட்ட நீதிபதி சீனிவாசன், மகிளா கோர்ட்டு நீதிபதி சுபத்ரா, முதன்மை குற்றவியல் நீதிபதி கவிதா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பரணிதரன், விரைவு விசாரணை கோர்ட்டு நீதிபதி விர்ஜின்வெஸ்டா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளர் கதிரவன், நீதித்துறை நடுவர் எண்.1 நீதிபதி சிட்டிபாபு, எண்.2 நீதிபதி பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.