< Back
மாநில செய்திகள்
சுதந்திரதின விழா கொண்டாட்டம்
சிவகங்கை
மாநில செய்திகள்

சுதந்திரதின விழா கொண்டாட்டம்

தினத்தந்தி
|
16 Aug 2022 12:01 AM IST

திருப்பத்தூரில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது.

திருப்பத்தூர்,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் சுதந்திரதின விழா நடந்தது. மருது பாண்டியர்கள் நினைவிடத்தில் வாரிசுதாரர் ராமசாமி தலைமையேற்க பேரூராட்சி தலைவர் கோகிலாராணி நாரா யணன் கொடியேற்றினார். வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர். நெடுமரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சி.கே.ஆர். நிறுவனத்தின் இயக்குனர் நெடுமரம் எம்.ஆர்.சி. இளங்கோவன் கொடி ஏற்றினார். விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் கல்லூரி முதல்வர் சசிகுமார் கொடியேற்றினார். திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் ராதா கிருஷ்ணன் முன்னிலை வகிக்க தலைவர் கோகிலா ராணி நாராயணன் கொடியேற்றினார். திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழுத் தலைவர் சண்முகவடிவேல் கொடியேற்றினார். தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் சிறப்பு நிலைய அலுவலர் ஆனந்த சுப்பிரமணியன் கொடியேற்றினார். கிறிஸ்து ராஜா மெட்ரிக் பள்ளியில் பள்ளியின் முன்னாள் மாணவி டாக்டர் மணிமொழி கொடியேற்றினார். முதல்வர் ரூபன், தாளாளர் விக்டர் உள்ளிட்ட ஆசிரியர்-ஆசிரியைகள் கலந்து கொண்டனர். முத்தையா மெமோரியல் திறன்மேம்பாட்டுத் திறன் பயிற்சி மையத்தில் தாளாளர் காசிநாதன் கொடி யேற்றினார். நேஷனல் அகாடமி சமுதாயக்கல்லூரியில் முதல்வர் சுரேஷ்பிரபாகர் கொடிேயற்றினார். பாபா அமீர் பாதுஷா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளியின் தாளாளர் பாபா அமீர் பாதுஷா தலைமை வைத்து கொடி ஏற்றி வைத்தார். பி.எஸ்.ஆர். கிரீன் பார்க் இன்டர்நேஷனல் பள்ளியில் சேர்மன் சுலைமான் பாதுஷா, பொருளாளர் பிரமி ஆகியோர் முன்னிலையில் மனவளக்கலை அறக்கட்டளைகள் செயலர் சுப்பையா கொடியேற்றினார். திருப்பத்தூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நீதித்துறை நடுவர் சதாத்துநிஷா கொடியேற்றினார். கீழச்சிவல்பட்டி பஸ் நிலையத்தில் காங்கிரஸ் சார்பில் மாவட்ட பொருளாளர் பழனியப்பன் கொடியேற்றி வைத்தார். ஆர்.எம்.மெய்யப்ப செட்டியார் மெட்ரிக் பள்ளியில் சரவணன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். மீனாட்சி சுந்தரேஸ்வரர் மேல்நிலைப் பள்ளியில் சுப்பிரமணியன் செட்டியார், தம்பிபட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் வார்டு உறுப்பிர் சீனிவாசன், திருப்பத்தூர் நகர் காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டத் துணைத் தலைவர் கணேசன் கொடியேற்றினார்.

மேலும் செய்திகள்