< Back
மாநில செய்திகள்
மணப்பாறை அருகே 15 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மீன்பிடித் திருவிழா...! பொதுமக்கள் மகிழ்ச்சி
மாநில செய்திகள்

மணப்பாறை அருகே 15 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மீன்பிடித் திருவிழா...! பொதுமக்கள் மகிழ்ச்சி

தினத்தந்தி
|
18 Dec 2022 10:21 AM IST

மணப்பாறை அருகே 15 ஆண்டுகளுக்கு பிறகு பெரியகுளத்தில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.

திருச்சி,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சமுத்திரம் பகுதியில் பெரியகுளம் உள்ளது. அப்பகுதி மக்கள் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களின் பிரதான நீராதாரமாக விளங்கும் இக்குளத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் இன்று காலை மீன்பிடித்திருவிழா நடைபெற்றது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழையின் போது குளத்தில் நீர் முழுவதுமாக நிறைந்திருந்த நிலையில் அதில் அதிக அளவில் மீன்களும் துள்ளி விளையாடின.

இந்நிலையில் தற்போது நீரின் அளவு குறைந்து விட்டதால் கிராம மக்கள் சார்பில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. அதன்படி இன்று ஊர் முக்கியஸ்தர்கள் விழாவை தொடங்கி வைக்க, போட்டி போட்டுக் கொண்டு குளத்தில் இறங்கி ஊர்மக்கள் மீன் பிடிக்கத் துவங்கினர்.

கெண்டை, கெளுத்தி, கட்லா, ஜிலேபி என நாட்டுவகை மீன்கள் அனைவருக்கும் சிக்கியது. அனைவருக்கும் சுமார் 2 முதல் 10 கிலோ வரையில் பெரிய பெரிய மீன்களாக சிக்கியதால் மீன்பிடி ஆர்வலர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

மேலும் செய்திகள்