< Back
மாநில செய்திகள்
கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சேதமடைந்த மீன்பிடி படகு...!
மாநில செய்திகள்

கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சேதமடைந்த மீன்பிடி படகு...!

தினத்தந்தி
|
22 Oct 2022 9:13 AM IST

கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மீனவர்களின் படகில் பல இடங்களில் குண்டு துளைத்துள்ளது.

ராமேஸ்வரம்

காரைக்கால் பகுதியில் இருந்து படகு ஒன்றில் மீன் பிடிக்க சென்ற 10 மீனவர்கள் கோடியக்கரை அருகே உள்ள கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது சந்தேகப்படும்படியான படகு என நினைத்து மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகு மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் அந்த படகில் இருந்த தமிழக மீனவர் வீரவேல் என்பவர் படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மீதமுள்ள 9 மீனவர்களும் படகுடன் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் படகுகளில் பல்வேறு இடங்களில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து சேதம் அடைந்துள்ளது.

மேலும் செய்திகள்