< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் நாளை முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்

தினத்தந்தி
|
14 April 2024 1:59 AM IST

மீன்பிடித் தடைக்காலத்தைப் பயன்படுத்தி, மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவர்

சென்னை,

மன்னார் வளைகுடா கடலில் தற்போது மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலகட்டத்தில் மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடித்தால், மீன் வளம்குறைந்து விடும்.இதனை கருத்தில் கொண்டு, ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு, கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரையிலான கிழக்குக் கடற்கரைப் பகுதியில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (ஏப்ரல் 15) முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருகிறது.

மீன்பிடித் தடைக்காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல், துறைமுகத்தின் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிறுத்திவைக்கப்படும். அதேநேரத்தில், மீன்பிடித் தடைக்காலத்தைப் பயன்படுத்தி, மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவர்.எனினும், வள்ளம், கட்டுமரம், பைபர் படகுகள் உள்ளிட்ட நாட்டுப் படகுகளில் மட்டும் மீனவர்கள் கரையோரப் பகுதியில் மீன் பிடிக்கச் செல்வர்.

மேலும் செய்திகள்