தஞ்சாவூர்
செங்கிப்பட்டி ஊரணி ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன
|செங்கிப்பட்டி ஊரணி ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன
செங்கிப்பட்டி ஊரணி ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன. தண்ணீரில் விஷம் கலக்கப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊரணி ஏரி
தஞ்சையை அடுத்துள்ள செங்கிப்பட்டியில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் செல்லும் சாலையில் உள்ளது ஊரணி ஏரி. கடந்த சில தினங்களாக செங்கிப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்தநிலையில் செங்கிப்பட்டியிலிருந்து கீரனூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஊரணி ஏரியில் தண்ணீர் நிரம்பியது. ஊரணி ஏரியில் மீன்களை வளர்ப்பதற்காக வெளியில் இருந்து மீன்கள் கொண்டு வரப்பட்டு ஏரியில் விடப்பட்டது. இந்த ஏரியில் நேற்று காலை திடீரென நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது.
விஷம் கலக்கப்பட்டதா?
இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் சம்பவஇடத்திற்கு வந்து பார்த்தனர். சமூக விரோதிகள் யாராவது ஏரி தண்ணீரில் விஷம் கலந்தனரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என செங்கிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.