< Back
தமிழக செய்திகள்
மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக்கோரி மீனவர் அமைப்பினர் போராட்டம்
சென்னை
தமிழக செய்திகள்

மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக்கோரி மீனவர் அமைப்பினர் போராட்டம்

தினத்தந்தி
|
14 April 2023 10:50 AM IST

மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக்கோரி மீனவர் அமைப்பினர் போராட்டம் கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்றது.

தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். கடல்சார் வேலை வாய்ப்புகளில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மீனவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும். மீன்வளத்தை அழிக்கும் அனல் நிலையங்களை தவிர்க்கவேண்டும்.

கடல் அரிப்புக்குக்காரணமாக உள்ள கடற்கரை மணல் அள்ளும் அனுமதியை ரத்து செய்யவேண்டும். ஆழ்கடல் மீன்பிடி படகு கட்டுவதற்கு வழங்கப்படும் மானியத்தொகையை அனைத்து கடற்கரை மாவட்ட மீனவர்களுக்கும் 70 சதவீதம் வழங்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய மீனவர் சங்கத்தின் தலைவர் வக்கீல் எம்.இ.ராஜா தலைமை தாங்கினார். அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசிய செயலாளர் ஆன்டன் கோமஸ் தொடங்கிவைத்தார். ஆர்ப்பாட்டத்தில் சமூக செயல்பாட்டாளர் டி.எஸ்.எஸ். மணி மற்றும் புதுவை புகழேந்தி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்