< Back
மாநில செய்திகள்
மீனவர்கள் கைது: மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மாநில செய்திகள்

மீனவர்கள் கைது: மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தினத்தந்தி
|
11 Dec 2023 2:47 PM IST

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

நாகை துறைமுகத்தில் இருந்து தமிழகம் மற்றும் காரைக்காலை சேர்ந்த 25 மீனவர்கள் 3 படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களை கடந்த 9-ந்தேதி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். மீனவர்களின் 3 படகுகளையும் சிறைபிடித்துள்ளனர்.

இந்த நிலையில், மீனவர்களையும், அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது என்றும், தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அந்த கடிதத்தில் முதல்-அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்