< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்
|19 Nov 2022 1:09 AM IST
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோட்டைப்பட்டினம்:
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ள காரணத்தால் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட மீன்வளத்துறை சார்பாக மீனவர்கள் யாரும் இன்று(சனிக்கிழமை) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளனர். இதனால் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.