மீனவர்கள் போராட்டம்: ராமேஸ்வரத்தில் பஸ் போக்குவரத்து நிறுத்தம்
|ராமேஸ்வரம் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ராமேஸ்வரம்,
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகு மீது இலங்கை ரோந்து கப்பல் மோதியதில் ஒரு மீனவர் உயிரிழந்தார். 2 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும் ஒருவர் மாயமாகியுள்ளார்.
இந்த நிலையில், இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலுக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும், உயிரிழந்த மீனவரின் உடலை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ராமேஸ்வரம் தாலுகா அலுவலகம் முன்பு ராமேஸ்வரம் - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடைபெறுவதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ராமேஸ்வரம் செல்லும் பஸ்கள், சுற்றுலா வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் அப்பகுதி பரபரப்புடன் கானப்படுகிறது.