< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
காரைக்காலில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை - மீன்வளத்துறை அறிவிப்பு
|19 Jun 2023 7:18 PM IST
காரைக்காலில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காரைக்கால்,
காரைக்காலில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தென்கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று, மணிக்கு 45-65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல தடை விதித்து காரைக்கால் மாவட்ட மீன்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.