< Back
மாநில செய்திகள்
கச்சத்தீவை மீட்டுவிட்டால் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் - துரை வைகோ
மாநில செய்திகள்

'கச்சத்தீவை மீட்டுவிட்டால் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்' - துரை வைகோ

தினத்தந்தி
|
5 Sept 2024 11:50 PM IST

கச்சத்தீவை மீட்டுவிட்டால் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என துரை வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை,

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது;-

"கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 6 ஆயிரம் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ளனர். அதில் 500 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். சமீபத்திய ஆண்டுகளில் மீனவர்கள் மீதான தாக்குதலின் வீரியம் அதிகரித்துள்ளது.

கடந்த 8 மாதங்களில் 320-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். கச்சத்தீவை மீட்டுவிட்டால் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். ஆனால் இலங்கை அரசு ஒருபோதும் கச்சத்தீவை திருப்பி தராது."

இவ்வாறு துரை வைகோ தெரிவித்தார்.


மேலும் செய்திகள்