< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல தடை
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல தடை

தினத்தந்தி
|
19 July 2023 12:15 AM IST

பலத்த காற்று எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கீழக்கரை,

பலத்த காற்று எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று

ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் கடல் சீற்றமாகவே காணப்பட்டது. இதனால் தென்கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதனால் கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம், மாரியூர், முந்தல் உள்ளிட்ட ஊர்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் 100-க்கும் அதிகமான விசைப்படகுகளும் மீன்பிடிக்க செல்லாமல் கரையோரத்தில் உள்ள கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

படகுகள் நிறுத்தம்

இதே போல் மண்டபம் தெற்கு துறைமுகம் மற்றும் பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் மீன் பிடிக்க செல்லாமல் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் 400-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

கடல் சீற்றம் மற்றும் காற்றின் வேகம் குறைந்த பின்னரே தென்கடல் பகுதியில் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

இன்று மீன்பிடிக்க தடை

இந்த நிலையில் பலத்த காற்று காரணமாக பாக்ஜலசந்தி கடல் பகுதியில் இன்று(புதன்கிழமை) அனைத்து விசைப்படகு, மீன்பிடி படகு மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் நிறுத்தப்படுகின்றன.

Related Tags :
மேலும் செய்திகள்