நாகப்பட்டினம்
மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
|வேதாரண்யம் பகுதியில் பெய்த மழையால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியில் பெய்த மழையால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
விட்டு, விட்டு மழை
வேதாரண்யம் பகுதியில் கடந்த சில வாரங்களாக இயல்பை விட அதிக அளவில் வெப்பம் இருந்து வந்தது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். விவசாய கூலித்தொழிலாளா்கள் வேலை செய்ய முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர்.
தொடர்ந்து வேதாரண்யம் மானாவாரி பகுதியில் சம்பா சாகுபடிக்கு விதை தெளித்து விட்டு விவசாயிகள் மழைக்காக காத்து இருந்தனர். இந்த நிலையில் நேற்று முதல் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழையால் சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடலுக்கு செல்லவில்லை
இதனால் சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில், இந்த மழையால் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி நிறுத்தம் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மழை மற்றும் காற்றின் வேகத்தால் வேதாரண்யம் பகுதியில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் மீனவர்கள் தங்களது பைபர் படகுகளை கடற்கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.