மயிலாடுதுறை
திருமுல்லைவாசலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
|கடல் சீற்றம் காரணமாக திருமுல்லைவாசலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
சீர்காழி:
திருமுல்லைவாசல், தொடுவாய் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடந்த 3 நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களுடைய படகுகளை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். சுனாமி குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.கொள்ளிடம் ஒன்றிய பகுதிகளில் விடிய, விடிய மழை பெய்தது. பழையார் சுனாமி குடியிருப்பில் 800 வீடுகளை மழை நீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனர்.மேலும் தாண்டவன் குளம், புதுப்பட்டினம், ஆலங்காடு, பழைய பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா சாகுபடி நெற்பயிர்கள் மூழ்கின. கடல் சீற்றம் காரணமாக பழையார் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் தங்களது விசைப்படகுகளை பக்கிகாம் கால்வாய் மற்றும் பழையார் துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். மழை காரணமாக மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.