< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்

துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் - விடுவிக்கக்கோரி உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை

தினத்தந்தி
|
8 Sept 2022 12:12 AM IST

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 12 பேரை விடுவிக்கக்கோரி மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரைக்கால்,

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 12 பேரை விடுவிக்கக்கோரி மத்திய மாநில அரசுகளுக்கு மீனவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரைக்காலை அடுத்த கீழ காசாக்குடி மேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் உலகநாதன் (வயது 28). இவருக்கு சொந்தமான விசைப்படகில் நேற்று முன்தினம் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து, கீழ காசாகுடி மேடு பகுதியை சேர்ந்த மணிவண்ணன், கார்த்தி, செல்வமணி உள்ளிட்ட 12 மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

நேற்று மாலை, கடலில் நிலவும் தட்பவெட்ப நிலைக்கு எதிர் மாறாக, இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கைக்கு உட்பட்ட முல்லை தீவு அருகே சென்றதால், அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 12 மீனவர்களையும் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

மேலும் மீனவர்களின் விசை படகையும் பறிமுதல் செய்து மீனவர்களை இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். இந்த நிலையில் அவர்களை படகுடன் விடுவிக்கக் கோரி மீனவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்