< Back
மாநில செய்திகள்
மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை
கடலூர்
மாநில செய்திகள்

மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை

தினத்தந்தி
|
24 July 2023 12:15 AM IST

வங்கக்கடலில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

கடலூர் முதுநகர்

சூறாவளிகாற்று

கடலூர் துறைமுகத்தில்இருந்து சிங்காரத்தோப்பு, தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம், அக்கரை கோரி, ராசாபேட்டை சொத்திகுப்பம், சித்திரப்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் 100-க்கும் மேற்பட்ட பைபர் மற்றும் விசை படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கமாகும்.

இந்த நிலையில், தமிழக வங்கக்கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவும் எனவும், மணிக்கு 55 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மீன்பிடிக்க செல்லக்கூடாது

இதனைத் தொடர்ந்து கடலூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விசை மற்றும் பைபர் உள்ளிட்ட அனைத்து வகையான மீன்பிடி படகுகளில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் யாரும் நேற்று மாலை முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என அறிவுறுத்தி உள்ளார்.

மேலும், மீனவர்கள் இந்த அறிவிப்பை தவறாது பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்