< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
விசைப்படகுகளை பழுது பார்க்கும் பணியில் மீனவர்கள் மும்முரம்
|27 May 2022 10:16 PM IST
விசைப்படகுகளை பழுது பார்க்கும் பணியில் மீனவர்கள் மும்முரம்
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. தற்போது மீன் இனப்பெருக்க காலத்தையொட்டி மீன்பிடி தடைக்காலம் 61 நாட்களுக்கு அமல்பபடுத்தப்பட்டுள்ளது. இதனால் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கடலிலிருந்து பொக்லின் எந்திரம் மூலம் கரைக்கு கொண்டு வந்து பழுது பார்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து படகை தூய்மை செய்தல், வர்ணம் பூசுதல், என்ஜின் பழுது பார்த்தல், வலைகளை சரிசெய்தல் போன்ற பல்வேறு பணிகளிலும் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை மீன்பிடி தடைக்காலம் முடிவதற்குள் அரசு வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.