< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடியில் மீனவருக்கு கத்திக்குத்து
தூத்துக்குடி
மாநில செய்திகள்

தூத்துக்குடியில் மீனவருக்கு கத்திக்குத்து

தினத்தந்தி
|
27 Oct 2023 12:15 AM IST

தூத்துக்குடியில் குடும்ப பிரச்சினையில் மீனவர் கத்தியால் குத்தப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தூத்துக்குடி மட்டக்கடை காளியப்பர் தெருவை சேர்ந்தவர் தாமஸ். இவருடைய மகன் நிர்மல்ராஜ் (வயது 25). மீனவர். இவருடைய நண்பர் சிம்சன். நேற்று முன்தினம் இரவு சிம்சனின் உறவினர் ஒருவருக்கும், நிர்மல் ராஜ் உள்ளிட்ட நண்பர்களுக்கும் இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த 3 பேர் சேர்ந்து நிர்மல்ராஜை கத்தியால் குத்திவிட்டு சென்று விட்டார்களாம். இதில் பலத்த காயம் அடைந்த நிர்மல்ராஜ் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்