திருவள்ளூர்
எண்ணூரில் மேம்பால தூணில் மோட்டார் சைக்கிள் மோதி மீனவர் பலி
|எண்ணூரில் மேம்பால தூணில் மோட்டார் சைக்கிள் மோதி மீனவர் பரிதாபமாக இறந்தார்.
மீனவர் பலி
எண்ணூர் நெட்டுக்குப்பம் சின்ன அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 35). மீனவரான இவர், நேற்று மோட்டார் சைக்கிளில் எண்ணூர் நோக்கி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அன்னை சிவகாமி நகர் அருகில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த மேம்பால தூணில் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மணிவண்ணன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி செங்குன்றம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
ஆவடியை அடுத்த வெள்ளானூர் விஜயா நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (22). குன்றத்தூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனி யில் வேலை செய்துவந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வண்டலூர்-மீஞ்சூர் 400 அடி சாலையில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார்.
வீராபுரம் ஜங்ஷன் அருகே சர்வீஸ் சாலையில் சென்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த பாலகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.