< Back
மாநில செய்திகள்
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடலில் தவறி விழுந்து மீனவர் சாவு
சென்னை
மாநில செய்திகள்

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடலில் தவறி விழுந்து மீனவர் சாவு

தினத்தந்தி
|
28 May 2023 12:57 PM IST

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடலில் தவறி விழுந்து மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் கடற்பகுதியில் கடலில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசாருக்கு மீனவர்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், கடலில் மிதந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் நடத்திய விசாரணையில் கடலில் பிணமாக கிடந்தவர், காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்த சுரேந்தர் (வயது 29) என்பதும், கடலில் மீன்பிடிக்க செல்வதற்காக நள்ளிரவு புறப்பட்ட நிலையில் வார்ப்பு பகுதியில் நிலைதடுமாறி கடலில் தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதுபற்றி காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்