< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
பழவேற்காடு கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி
|16 Aug 2023 3:36 PM IST
பழவேற்காடு கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலியானார்.
பழவேற்காடு,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு திருமலை நகரில் வசித்து வந்தவர் சிவக்குமார் (வயது 42). மீனவரான இவர் பைபர் படகில் சில தினங்களுக்கு முன் கடலில் மீன் பிடிக்க சென்றார். அப்போது திடீரென ஏற்பட்ட கடல் சீற்றத்தால் படகு தூக்கி வீசப்பட்டு விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் மீனவர் சிவகுமார் முதுகு தண்டுவடம் காயம் ஏற்பட்டதால் சக மீனவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக பலியானார். இது குறித்து திருப்பாலைவனம் போலீசில் புகார் செய்ததன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.