< Back
மாநில செய்திகள்
கடலில் தவறி விழுந்து மீனவர் சாவு
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

கடலில் தவறி விழுந்து மீனவர் சாவு

தினத்தந்தி
|
6 March 2023 1:06 AM IST

கடலில் தவறி விழுந்து மீனவர் இறந்தார்.

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள அந்தோணியார்புரம் கொள்ளுக்காடு பகுதியை சேர்ந்தவர் பத்திநாதன் (வயது63). இவருடைய மகன் அந்தோணிராஜ் (33). மீனவர். இவர் நேற்று கடலுக்கு சென்று மீன்பிடித்து விட்டு கரை திரும்பினார். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் படகிலிருந்து தவறி கடலுக்குள் விழுந்தார்.இதையடுத்து பதறிப்போன உடன் வந்த மீனவர்கள் அவரை மீட்டு பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, அந்தோணிராஜின் தந்தை பத்திநாதன் அளித்த புகாரின் பேரில், சேதுபாவாசத்திரம் கடலோரக் காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இறந்து போன அந்தோணிராஜுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடலுக்கு சென்று விட்டு கரை திரும்பும்போது கடலுக்குள் தவறி விழுந்து மீனவர் இறந்த சம்பவம் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்