கன்னியாகுமரி
மதுகுடித்ததை மனைவி கண்டித்ததால் மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை
|கொல்லங்கோடு அருகே மதுகுடித்ததை மனைவி கண்டித்ததால் மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கொல்லங்கோடு,
கொல்லங்கோடு அருகே மதுகுடித்ததை மனைவி கண்டித்ததால் மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மீனவர் தற்கொலை
கொல்லங்கோடு அருகே மார்த்தாண்டம் துறை பகுதியை சேர்ந்தவர் ஜாண்விக்டர். இவருடைய மகன் சுபின் விக்டர் (வயது30), மீனவர். இவருக்கு குடிபழக்கம் இருந்ததால், சில வாரங்கள் முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சுபின் விக்டர் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அதை அவருடைய மனைவி டோணி (22) கண்டித்தார். இதனால் கோபம் அடைந்த சுபின் தனது அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டார். இரவு ஆகியும் சுபின் விக்டர் அறை கதவை திறக்காததால் டோணி வெளி ஜன்னல் வழியே உள்ளே பார்த்தபோது சுபின் விக்டர் ஜன்னலில் சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த டோணியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் கதவை உடைத்து சுபின் விக்டரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுபின் விக்டர் இறந்து விட்டதாக கூறினார்கள்.
போலீசார் விசாரணை
இது தொடர்பாக டோணி கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.