< Back
மாநில செய்திகள்
மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
13 Nov 2022 1:55 AM IST

கன்னியாகுமரி அருகே மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை

கன்னியாகுமரியை அடுத்த கோவளத்தை சேர்ந்தவர் சகாயம் (வயது34), மீனவர். இவருக்கு மனைவியும், 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர். இவருக்கு கடந்த‌ 6 ஆண்டுகளுக்கு முன்பு முதுகில் அறுவை சிகிச்சை செய்ததாக தெரிகிறது. அதன்பின்பு வேலைக்கு செல்ல முடியாமல் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று மதியம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்