< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கடலூர் விசைப்படகு மீனவர்கள் ஆந்திர கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் - மீன்வளத்துறை அறிவுறுத்தல்
|22 July 2023 3:21 PM IST
கடலூர் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் ஆந்திர கடல் பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கடலூர்,
வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும், ஆந்திர கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தின் கடலூர் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் ஆந்திர கடல் பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆந்திர கடல் பகுதிகளில் மணிக்கு சுமார் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், கடலூர் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.