< Back
மாநில செய்திகள்
மீன் வளர்ப்பு பயிற்சி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

மீன் வளர்ப்பு பயிற்சி

தினத்தந்தி
|
3 Feb 2023 12:15 AM IST

காரங்காடு கிராமத்தில் மீன் வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது.

தொண்டி,

திருவாடானை தாலுகா காரங்காடு கிராமத்தில் மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம், சார்பில் மத்திய உயிரியல் தொழில்நுட்ப துறை நிதி உதவியுடன் இயங்கி வரும் ஒருங்கிணைந்த பன்னடுக்கு உவர்நீர் மீன் வளர்ப்பு முறை திட்டத்தின் ஒரு பகுதியாக பச்சை ஆளி மற்றும் உவர்நீர் சிப்பி வகைகள் வளர்ப்பிற்கான பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் வணிக முக்கியத்துவம் வாய்ந்த பச்சை ஆளி, உவர்நீர் சிப்பி வகைகளின் இனப்பெருக்கம், வளர்ப்பு, தீவனம், நோய் மேலாண்மை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் செந்தில் முருகன், முதன்மை விஞ்ஞானி பயனாளிகளுக்கு பயிற்சி அளித்தார். இதில் 103 பயனாளிகள் கலந்து கொண்டனர். இத்திட்டத்தின் இணை அலுவலரான ஜெயபவித்ரன், தேவநாதன், களப்பணியாளர் பயிற்சியை ஒருங்கிணைத்து நடத்தினர். மேலும், ஊராட்சி மன்ற தலைவர் கார்மேல்மேரி செங்கோல் மற்றும் கிராம தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்