< Back
மாநில செய்திகள்
காசிமேடு மீன் மார்க்கெட்டில் ரூ.15 கோடிக்கு மீன் விற்பனை
சென்னை
மாநில செய்திகள்

காசிமேடு மீன் மார்க்கெட்டில் ரூ.15 கோடிக்கு மீன் விற்பனை

தினத்தந்தி
|
3 Oct 2022 6:13 AM GMT

தொடர் விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன்களை வாங்க பொதுமக்களும், வியாபாரிகளும் நேற்று காசிமேடு மீன் மார்க்கெட்டில் குவிந்தனர்.

சென்னை:

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 1200க்கு மேற்பட்ட விசைப்படகுகள், 800-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மீன்பிடித் தொழிலை ஈடுபட்டு வருகின்றன. இங்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ மக்களும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

விடுமுறை நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பொதுமக்கள் மீன்களை வாங்க இந்த காசிமேடு மீன் மார்க்கெட்டில் கூடுடுவது வழக்கம். அதேபோன்று நேற்று தொடர் விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன்களை வாங்க பொதுமக்களும், வியாபாரிகளும் குவிந்தனர்.

சமீப காலங்களில் கடுமையான டீசல் விலை ஏற்றத்தின் காரணமாக 30 சதவீத விசைப்படகுகளே மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று 20 சதவீத விசைப்படுகுகள் கரை திரும்பினர் 280 டன் வரை நேற்று மீன் விற்பனை நடைபெற்றது.

பெரிய வகை மீன்களான வஞ்சிரம், வவ்வால், பாறை, திருக்கை போன்ற மீன்கள் அதிகளவு விற்பனைக்கு வந்தன. மீன்களின் விலையும் அதிகமாகவே காணப்பட்டது. ரூ. 10 கோடி முதல் 15 கோடி ரூபாய் வரை மீன் விற்பனை நடைபெற்றது.

மேலும் கண்டல் மீன் 20 டன் வஞ்சிரம் 15 டன் வவ்வால் 15 டன் பாறை 50 டன் சங்கரா 25 டன் மற்ற மீன்கள் 155 டன் மீன் விற்பனை நடைபெற்றது.

மேலும் செய்திகள்