< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஞாயிற்று கிழமையையொட்டி காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் குவிந்த மீன் பிரியர்கள்
|27 Nov 2022 11:18 AM IST
கார்த்திகை மாதம் என்பதால், மீன்கள் விலை குறைவாக கானப்பட்டது. .
சென்னை,
காசிமேடு மீன்பிடி சந்தையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் திருவிழா போன்று கூட்டம் அலை மோதுவது வழக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காசிமேடு மீன் பிடித்துறைமுகம் சந்தை மக்கள் கூட்டத்தால் களைகட்டியது.
கார்த்திகை மாதம் என்பதால், மீன்கள் விலை குறைவாக விற்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச்சென்றனர். வஞ்சிரம் ரூ.800, கொடுவா ரூ.400, சங்கரா ரூ.400க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.